உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன அதிகாரி மயங்கி விழுந்து சாவு

மதுரையில் தனியார் நிறுவன அதிகாரி மயங்கி விழுந்து இறந்தார். நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை.

மாலை மலர்

மதுரை

மதுரை பொன்மேனி முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் திருநாவுக்கரசு (வயது 30). மாற்றுத்திறனாளியான இவர் காளவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

அவர் பணியில் இருந்த போது பாத்ரூம் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதை தொடர்ந்து சந்தேகமடைந்த ஊழியர்கள் பாத்ரூமின் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு திருநாவுக்கரசு ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நிதநிறுவன துணை மேலாளர் திருநாவுக்கரசின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.