மதுரை
கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்த முனியன் மகன் முருகன் (44). இவர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி முருகனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.