உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

சோழவந்தான் பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

மாலை மலர்

சோழவந்தான்

சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. சோழவந்தான் பிரளயநாத கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை வலம் வந்தனர். எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன், மற்றும் கோவில் நிர்வா கத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாய நல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வர முடையார் கோவில் தென்கரை அகிலாண்டே சுவரி சமேத மூலநாதசுவாமி ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.