மதுரை
மதுரை மற்றும் நெல்லை கோட்ட வணிகவரித்துறை நுண்ணறிவு அதிகாரிகள் சமீபத்தில் திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் இரும்பு நிறுவனத்தின் வருடாந்திர கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 2020-2021, 2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டுக்கான கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அந்த வணிக நிறுவன கணக்கில் வராத இரும்பு கம்பிகள் இருப்பில் உள்ளது தெரியவந்தது.
அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது ரூ. 9.26 கோடியில் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியாக, ரூ.1.81 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.