ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி ஒன்றிய கூட்டம்

திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது. செக்கனூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் லதா ஜெகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார்.

கூட்டம் தொடங்கி யவுடன் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப் பட்டது. இதனை தொட ர்ந்து கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, மின்னல் கொடி, ஓம் ஸ்ரீ முருகன் உள்பட பலர் தங்களது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.

கவுன்சிலர் மின்னல் கொடி பேசுகையில், காண்டை, பொன்னமங்கலம், வாகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிதி ஒதுக்கா ததால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. மக்கள் கேள்வி கேட்கின்ற னர். எனவே கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் சுகாதார பணி மேற்கொள்ளப்படும் போது கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். செக்கனூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.