உள்ளூர் செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மாலை மலர்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலுக்கு தனியார் நிறுவனம் சார்பில் www.maduraimeenakshi.org இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. அது இப்போது மூடப்பட்டு விட்டது. தமிழக அரசு சார்பில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் பழைய இணையதளம் மூலம் புதிய இணையத்தை பார்வையிடலாம். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கோவிலுக்கு நன்கொ டை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அரசு இணையதள முகவரி தவிர கோவிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.