உள்ளூர் செய்திகள்

மேலூர் கோர்ட்டில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி இன்று ஆஜர்

மேலூர் கோர்ட்டில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி இன்று ஆஜரானார்.கிரா–னைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

மாலை மலர்

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூ–ரில் ஏராளமான கிரானைட் குவாரிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குவாரிகளில் முறை–யீடு நடந்ததாகவும், அதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அரசு சார்பில் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட வழக்கு–கள் பதிவு செய்யப்பட்டது.

இதில் பெரும்பாலான கிரானைட் வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள ஒரு சில வழக்குகள் இன்னும் மேலூர் கோர்ட்டிலேயே நடந்து வருகிறது. அதில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி தொடர் பான கிரானைட் வழக்கு மேலூர் கோட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது துரை தயாநிதி தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல கிருஷ்ணன், கிரானைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.