உள்ளூர் செய்திகள்

மந்தை கருப்பணசாமி கோவில் உற்சவ விழா

அலங்காநல்லூர் அருகே உள்ள மந்தை கருப்பணசாமி கோவில் உற்சவ விழா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஇலந்தைகுளம் ஆற்றங்கரை தென்புறம் உள்ளது மந்தைகருப்பண சுவாமி கோவில். இங்கு ஆனி மாத கிடாய் வெட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு உற்சவ விழா நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பழனிச்சாமி நாட்டாமை வகையறா, அலங்கார் பூசாரி வகையறா, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT