உள்ளூர் செய்திகள்

பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் சாவு

பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

MDUChandrasekar

மதுரை

மதுரை பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (49). இவர் தெற்குவாசல் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து உறவினர் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ஐகோர்ட்டு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்தவர் பாரதிராஜா (41). இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மனைவி ஹேம சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.