கைது 
உள்ளூர் செய்திகள்

கபடி வீரர்கள் 6 பேர் கைது

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கபடி வீரர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

மதுரை

மதுரை அர்.ஆர். மண்டபம் துரைசாமி மகன் காந்திஸ்வரன் (வயது 23). இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சிலருடன் கபடி விளையாட்டு காரணமாக நட்பு ஏற்பட்டது. காந்திஸ்வரனுக்கும், அதே அந்தப்பகுதியில் வசிக்கும் சூரியா (25) என்பவருக்கும் இடையே  ‘யார் பெரியவர்?’ என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.  ஆத்திரம் அடைந்த சூர்யா மற்றும் கூட்டாளிகளான யானைக்கல் சோமசுந்தர அக்ரஹாரம்தெரு பாலமுருகன் என்ற அழுக்கு பாலா(27), அண்ணாநகர் மூர்த்தி மகன் முருகன்(19), ஆசாரி தோப்பு சசி மகன் மதனகோபால்(19) ஆகிய 4பேரும் சேர்ந்து கார்த்தீஸ்வரனை அடித்து உதைத்தனர். 

இதில் அவரது மண்டை உடைந்தது. அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கார்த்தீஸ்வரன் இது தொடர்பாக மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 4பேரையும் கைது செய்தனர். இதே வழக்கில் சூர்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், வைகை வடகரை சின்னக்கண்ணன் மகன் கடலை என்ற முத்துகருப்பு (வயது 24) மற்றும் காந்திஸ்வரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.