பணம் பறிப்பு 
உள்ளூர் செய்திகள்

நகை-பணம் பறிப்பு

மதுரையில் விவசாயி, மாணவரிடம் கத்தி முனையில் நகை-பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.

மதுரை

மதுரை அருள் நகர், வ.உ.சி. தெருவைச் சேர்ந்த வர் ராஜசேகர் (வயது 30). விவசாயி. இவர் பை-பாஸ் ரோடு, பி.ஆர்.சி. டெப்போ அருகில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு  வந்தார்.   அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 3 பேர் இருந்தனர்.  அவர்கள் ராஜசேகரிடம் கத்தி முனையில் ஒரு பவுன் தங்க சங்கிலி, ரூ.5 ஆயிரம்  மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு   தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில்  எஸ்.எஸ்.காலனி  போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

மதுரை பொன்மேனி செண்பகமூர்த்தி மகன் கோபிநாத் (வயது 16). பிளஸ்-1 மாணவர்.  சம்பவத்தன்று இவர் பை-பாஸ் ரோடு பகுதியில் நடந்து சென்றார்.   மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்  கத்தியை காட்டி மிரட்டி கோபிநாத்திடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். 

இதுகுறித்தும் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  மதுரை பை-பாஸ் ரோட்டில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT