நகை பறிப்பு 
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

புதூரில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை புதூர் சங்கர் நகரைச் சேர்ந்தவர் செல்வநாயகி (வயது 40). இவரது கணவர் கணேஷ் பிரபு.  மாட்டுத்தாவணி மலர் சந்தையில் வியாபாரியாக  உள்ளார். 

செல்வநாயகி நேற்று இரவு மகளை டியூசனில் இருந்து அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.  அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்தது. அதில் 2 பேர் இருந்தனர். 

செல்வ நாயகியின் மோட்டார் சைக்கிள் மேலூர் மெயின் ரோட்டில் வந்த போது மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். 

இதுகுறித்து செல்வ-நாயகி அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்-பெக்டர் அனுராதா வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT