உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை

மதுரை அருகே விவசாயி வீட்டில் 45 பவுன் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மாலை மலர்

மதுரை

மதுரை பெருங்குடி அருகே வலையப்பட்டியை அடுத்துள்ள ஓ.ஆலங்கு ளத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 42). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 45 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய பாண்டி கதவு உடை க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து பெருங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்க ப்பட்டன. இந்த துணிகர கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.