உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டு மைதான பணிகள் ஆய்வு

ஜல்லிக்கட்டு மைதான பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகளை பொதுபணித்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT