மதுரை
தென்மேற்கு பருவமழையானது, கடந்த ஆண்டைவிட தற்போது முன்கூட்டியே வருகிற 26-ந் தேதி முதல் கேரளாவில் பெய்யத்தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை பெய்யும் காலத்தில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கும். அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றலாம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களும் பாதிப்படைந்தனர்.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்ல சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் விரைவு வண்டி ஆகியவை நாள்தோறும் மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் மட்டும் சிலம்பு விரைவு ரெயில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ெரயில் நாள்தோறும் 3 முறை இயக்கப்பட்டு வந்தது. தற்போது 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. பகல் 11.15க்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு செங்கோட்டைக்கும், அங்கிருந்து 12 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 3.50க்கும் சென்றடையும் வகையில் இந்த ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ெரயில் இயக்கப்படாத காரணத்தால், ஏராளமான சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து, நீண்ட நேரம் பயணம் செய்யும் நிலை உள்ளது.
2018 ெரயில்வே பட்ஜெட்டில் தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ெரயில் அறிவிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் ஆகியும் இந்த ெரயில் இயக்கப்படவில்லை.
குற்றால சீசன் தொடங்குவதையொட்டி சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட மதுரை-செங்கோட்டை பகல் நேர பயணிகள் ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும். நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ெரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும் என பயணிகள், ெரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.