உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி ஓட்டல் ஊழியர் பலி

மதுரை அருகே ரெயில் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார். மதுரை ெரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருமங்கலம்

திருமங்கலம் கற்பகம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51).ஓட்டல் ஊழியர். நேற்று மாலை இவர் திருமங்கலம்-விமான நிலைய ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

அவரது உடலை ரெயில் என்ஜின் 20 மீட்டர் தூரத்திறகு இழுத்து சென்றது. மதுரை ெரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.