உள்ளூர் செய்திகள்

காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி

காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி நடக்கிறது. மதுரை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) சுசிலா தெரிவித்தார்.

மாலை மலர்

மதுரை

காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் வரிச்சியூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீநிகா, முதல்பரிசும், தோப்பூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி தீப்தி 2-ம் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிஷிபா 3-ம் பரிசும் வென்றனர். தத்தனேரி, திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன்அழகர்சாமி, பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் கோகுல் ஆகியோர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு வென்றனர்.

கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் மதுரை பாத்திமா கல்லூரி மாணவி ராஜேஸ்வரி முதல் பரிசும், மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி மங்கையர்க்கரசி 2-ம் பரிசும், கே.கே.நகர் வக்பு வாரியக் கல்லூரி மாணவன் இஸ்ஹாக் அகமது மூன்றாம் பரிசும் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் சங்கீதா வழங்குவார். இந்த தகவலை மதுரை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) சுசிலா தெரிவித்தார்.