உள்ளூர் செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர அரிமா சங்கம், வேலம்மாள் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன்ஸ் டாக்டர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில் அரிமா சங்க ஆளுநர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி முகாமை தொடங்கி வைத்தார். இதில் சோழவந்தான் அரிமா சங்க பொருளாளர் காந்தன் மற்றும் நிர்வாகிகள், வேலம்மாள் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

முகாமில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு மற்றும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

அரிமா சங்க முன்னாள் தலைவர் ராசி கண்ணன் நன்றி கூறினார். சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

SCROLL FOR NEXT