உள்ளூர் செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்

வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்-வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனின் 59-வதுபிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிரட்வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பாரத் நாச்சியப்பன், பைரவ மூர்த்தி, மாநில இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார். மாவட்டத் தலைவர் தனுஷ்கோடி தொடங்கி வைத்தார்.

நிர்வாகிகள் கச்சைகட்டி பாண்டி, தண்டீசுவரன், பொதும்பு செல்வம், புதுப்பட்டி கார்த்தி, பரவை ராமு, எம்.ஏ.முத்து, காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிஷா தலைமையில் 82 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 41 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்

SCROLL FOR NEXT