அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் கல்லணை கலைவாணர் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கோல்டன் ஜூப்ளி அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, அலங்காநல்லூர் ஆரம்ப கண் பரிசோதனை மையம் இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாமை நடத்தியது. கல்லணை ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு தலைமை தாங்கினார்.
பசுபதி, மணிகண்டன், அரிமா சங்க நிர்வாகிகள் ரகுபதி, சோமு, ஜெயராமன், கண்ணன் முன்னிலை வகித்தனர். கிட்டப் பார்வை,, தூரப்பார்வை, கண்ணில் நீர் கட்டி கோர்த்தல், அடிபட்டகண், நீர் வடிதல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர் பிரித்திவிராஜ் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார். பள்ளி தலைவர் விஜயன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமை மதுரை கோல்டன் ஜூப்ளி அரிமா சங்க தலைவர் ராம்தாஸ், செயலாளர் ராஜேஷ்சரவணன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.