உள்ளூர் செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமில் மருத்துவர் சாக்க்ஷி குமார் நோயாளிகளை பரிசோதனை செய்து கண் கண்ணாடி வழங்கினார்.

 அலங்காநல்லூர்

பாலமேட்டில் உள்ள தனியார் மகாலில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவர் சாக்க்ஷி குமார் நோயாளிகளை பரிசோதனை செய்து கண் கண்ணாடி வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்து வமனை முகாம் ஒருங்கி ணைப்பாளர் முருகேசன், தானம் அறக்கட்டளையின் கிராமப்புற மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்தையா மற்றும் பாலமேடு வட்டார களஞ்சிய ஒருங்கி ணைப்பாளர் வள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.

முகாமிற்கான பணிகளை பாலமேடு வட்டார களஞ்சிய தலைவிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்தனர். இந்த முகாமில் சுமார் 230க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT