உள்ளூர் செய்திகள்

மதுரையில் இ-சேவை மையம்

மதுரையில் இ-சேவை மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார் அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

மதுரை

மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு குழுக்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் கண்டோன்மெண்ட் போர்டு ஆகியவை மூலம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில் ஏற்கனவே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மையத்துக்கு மேஜை, கணினி, பயனர் எண், கடவுச்சொல் ஆகியவை அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து சேவைகளும் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.