திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், சின்ன ரெட்டிபட்டி, பெரிய பூலாம்பட்டி,குருவ நாயக்கன்பட்டி, சின்ன பூலாம்பட்டி, ஆகிய பகுதிகளில் நியாய விலைக்கடை, பேவர் பிளாக்சாலை அமைத்தல், பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அப்போது அந் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை அவரி வழங்கினர். இது தொடர்பாக உடனடியாக அதிகாரிகளிடம் கூறி தீர்வு காண்பதாக அவர் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
ஓராண்டில் நூறாண்டு சாதனை என்று திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் தாலிக்கு தங்கம், மடிக்கணினி திட்டம், சைக்கிள் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதியோர் ஓய்வூதியம் கொடுத்துக்கொண்டி ருந்ததை ரத்து செய்து கொண்டிருக்கின்றனர்.
இல்லங்கள் தோறும் திட்டங்களை சேர்ப்பது அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம். இன்றும் மக்களின் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடு கிறோம். தி.மு.க. ஆட்சியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. விலைவாசி உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ஒன்றிய செயலாளர் ராமசாமி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, மாவட்ட பொருளாளர் திருப்பதி, கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகப்ரியா பாவடியான், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பேரூர் கழக செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.