உள்ளூர் செய்திகள்

தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை

மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.

மேலூர்

மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களிடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உதவிட வேண்டும்/

தி.மு.க. ஆட்சியின் சாதனையை எடுத்துக் கூறியும் இன்றில் இருந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

இதில் மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவமான முகமது யாசின், மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்களான குமரன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், ராஜராஜன், ராஜேந்திர பிரபு, பழனி, கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், துரை புகழேந்தி, பூதமங்கலம் அப்பாஸ், பொருளாளர் ரவி, முருகானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT