உள்ளூர் செய்திகள்

மாவட்ட ஆக்கி போட்டி

மாவட்ட ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் மதுரை அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் தேசியவிளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை பிரிட்டானியா நீயூட்ரிசன் பவுன்டேசன் சார்பாக 14வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாவட்டஅளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 8அணிகள் விளையாடினர்.இதன் இறுதிபோட்டியில் திருநகர் இந்திரகாந்தி மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட திட்டஅலுவலர் ரஞ்சிதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்டஉடற்கல்வி ஆய்வாளர் வினோத் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கினார். முடிவில் உடற்கல்விஆசிரியர் ராஜா நன்றிகூறினார். இதன்ஏற்பாடுகளை உடற்கல்விஆசிரியர்கள் செந்தில்குமார்,சுரேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தராஜ், வாஞ்ஜிநாதன், தேவிப்ரியா, பானுப்ரியா, ஜஹீன்கௌசர் ஆகியோர் செய்திருந்தனர்.