மதுரை
மதுரை செல்லூர், சிவகாமி தெருவை சேர்ந்த முபாரக் மகன் கணவாய் உசைன் (வயது 11). இவர் சம்பவத்தன்று மாலை புது நத்தம் ரோடு நாராயணபுரம் கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது தண்ணீருக்குள் மூழ்கியவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்கு ன்றம், ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் கணேசன் (71). இவர் நேற்று மதியம் சரவணப் பொய்கையில் குளிக்க சென்றார்.
அப்போது குளத்துக்குள் நிலைதடுமாறி விழுந்தவர் தண்ணீருக்குள் மூழ்கிப் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக மகள் மீனாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.