உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடை-ஓட்டலில் புகுந்து துணிகர கொள்ளை

திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடை, ஓட்டலில் புகுந்து துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கருப்பையா என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று இரவு டாஸ்மாக் ஊழியர் மாயாண்டி வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் ஓட்டலும் மூடப்பட்டது.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த விலை யுயர்ந்த மதுபாட்டில்கள் மற்றும் வசூல் பணத்தை திருடி சென்றதாக தெரி கிறது. அங்கு கைவரிசை காட்டிய பின்பு அருகில் இருந்த ஓட்டல் கதவை உடைத்து உள்ளே சென்றது.

அங்கு நிதானமாக குளிர்சாதன பெட்டியில் இருந்த பானங்களை குடித்த மர்மநபர்கள் பின்னர் கல்லாபெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர். இன்று காலை டாஸ்மாக் கடை-ஓட்டல் கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கொள்ளையர்களின் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT