மதுரை
மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் வெம்பக்கோட்டை சத்தியாகாலனி மேலதாயில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்ற இன்னாசிமுத்து 1998-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த வாரம் பரோலில் வந்த அவர் 7-ந்தேதி சிறைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர் சிறைக்கு வராமல் தலைமறைவாகி விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.