தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர். 
உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருமங்கலம் அருகே காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராகுல்காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் தீப்பந்தம் ஏந்தி ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்தது தவறு என கண்டித்து கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமங்கலம் வட்டார தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிக்குமார், உலகநாதன், கள்ளிக்குடி வட்டார தலைவர்கள் பாண்டியன், தளபதி சேகர், கரிசல்பட்டி கிராம கமிட்டி முருகேசன், மணிகண்டன், மாவட்ட செயலாளர் ஆலம்பட்டி ராசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இரவில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT