உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா

காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சோழவந்தான்

சோழவந்தான் பகுதியில் அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தையொட்டி கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொம்மன்பட்டி, கணேசபுரம் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அமைப்புசாரா மாவட்ட தலைவர் சோனமுத்து தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், வட்டாரத் தலைவர் சுப்புராயலு, சமயநல்லூர் செந்தில் முன்னிலை வகித்தனர். மதுரை வடக்கு மாவட்ட தலைவர் மணி வரவேற்றார். மாநிலத் தலைவர் மகேசுவரன் கொடியேற்றினர். மாவட்ட நிர்வாகிகள் முருகன், நாராயணன், முத்துமணி, வரிசை முகமது, முகமது இனியா, வீரபாண்டி, ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. அவரது படத்திற்கு மாநிலத் தலைவர் மகேசுவரன் மாலை அணிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், மாவட்டத் தலைவர் சோனை முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.