உள்ளூர் செய்திகள்

ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார்.

மாலை மலர்

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றிய தொடக்க, ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கவிழா வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். இதில் கவுன்சிலர் ஜெயகாந்தன், இளநிலை உதவியாளர்கள் முத்துப்பாண்டி, சுந்தர்ராஜன், வார்டு செயலா ளர்கள் ராம் மோகன், திரவியம், பன்னீர்செல்வம், மருதுபாண்டி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார். அதேபோல் தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் பூமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி, ஆசிரியர்கள் மகேஸ்வரி, கலைச்பொன் கவிதா, சுய உதவிக்குழுவினர் விஜயலட்சுமி, லட்சுமி, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.