உள்ளூர் செய்திகள்

வாலிபர்களிடம் செல்போன், பணம் வழிப்பறி

வாலிபர்களிடம் செல்போன், பணம் வழிப்பறி செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த முகம்மது மகன் நூர் (18). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, மதுரை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

இந்த தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ராமசுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ் ( 26). இவர் நேற்று நள்ளிரவு மதுரை டோக் நகர் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நர்சரி பள்ளிக்கூடம் அருகே வழிமறித்து, கத்தி முனையில் செல்போன் மற்றும் மணிபர்சை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.