உள்ளூர் செய்திகள்

மருத்துவக்கல்லூரிக்கு சகோதரரின் உடலை தானமாக வழங்கிய பெண்

மருத்துவக்கல்லூரிக்கு சகோதரரின் உடலை தானமாக பெண் வழங்கினார்.பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

மாலை மலர்

மதுரை

மதுரை அண்ணாநகர் பெரியார் வீதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவரின் மனைவி சுசீலா தேவி. இவரின் தம்பி பிருதிவிராஜ் (வயது67). இவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்க சுசீலா தேவி முடிவு செய்தார்.

இதுகுறித்த தகவலை நேதாஜி ஆம்புலன்ஸ் மற்றும் நேதாஜி அறக்கட்டளை நிர்வாகி ஹரி கிருஷ்ணனிடம் தெரிவித்து ள்ளார். அவரின் ஏற்பாட்டில் மரணம் அடைந்த பிருதிவி ராஜ் உடல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சுசீலா தேவி தானமாக வழங்கினார். அவரின் இந்த சேவையை மருத்துவ கல்லூரி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.