உள்ளூர் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு நடந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை காமராஜர் சாலையை சேர்ந்தவர் மதிவாணன் (62).சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.