மதுரை
மதுரை ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி சோலையம்மாள் (வயது45). இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை,வெள்ளி கொலுசு, ரூ.50 ஆயிரம் மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சோலையம்மாள் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.