ஆர்ப்பாட்டம் 
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்

மதுரையில் இன்று பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தி.மு.க அரசை கண்டித்து தமிழகமெங்கும் இன்று நடந்தது.

மதுரை

பா.ஜ.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து தமிழகமெங்கும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மதுரை மாநகர் மாவட்டத்தில், மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் வக்கீல் பிரிவு மாநிலத்தலைவர் வணங்காமுடி, மாநில பொருளாதாரபிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர்.

இந்த போராட்டத்தில் பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், நிர்வாகிகள், அணி பிரிவு தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT