உள்ளூர் செய்திகள்

பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்

வடக்கு நாவினிபட்டியில் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிபட்டி ஊராட்சியை சேர்ந்த வடக்கு நாவினிபட்டியில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி 3 கால யாக சாலை பூஜைகளுடன் வேத பாராயணம் முழங்க, கருட பகவான் வானத்தில் தோன்றி காட்சி அளிக்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT