உள்ளூர் செய்திகள்

அடகு கடையில் கொள்ளை முயற்சி

மதுரை அருகே அடகு கடையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ரூ. 21 ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன.

மதுரை

மதுரை ஆத்திகுளம், மூகாம்பிகை தெருவைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (62). இவர் புதூர், பாரதியார் மெயின் ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

கடந்த 4-ந் தேதி இரவு இவர் 7 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றார். அதற்கு அடுத்த நாள் காலை கடைக்கு வந்தார். அப்போது கடையில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

எனவே அவர் பதறியடித்துக் கொண்டு கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கல்லாப்பெட்டி லாக்கரை காணவில்லை. அதில் நகை, பணம் ஆகியவை இருந்தன. எனவே வைத்தியநாதன் இதுதொடர்பாக கே.புதூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே நகை அடகு கடையில் கொள்ளை போன லாக்கர், டி.ஆர்.ஓ காலனியில் உள்ள குப்பைத்தொட்டியில் கிடந்தது. அதனை தூய்மைப் பணியாளர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். அதில் 21 ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை இருந்தன.