உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலருக்கு பாராட்டு விழா

சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலருக்கு பாராட்டு விழா நடந்தது.முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

மாலை மலர்

சோழவந்தான்

சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன். இவரது பொதுப்பணியை பாராட்டும் வகையிலும், தொடர்ந்து 2-வது ஆண்டாக லயன்ஸ் கிளப் தலைவராக தேர்ந்ெதடுக்கப்பட்டதை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க சோழவந்தான் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மகளிர் குழு சொர்ணம், கோதை, பாமா, நல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிட்டு வரவேற்றார். கோவில் அர்ச்சகர் கண்ணபிரான், பிரசாந்த் சர்மா ஆகியோர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கி னர். ராமநவமி கமிட்டி நிர்வாகி காசி விஸ்வநாதன், அய்யப்ப சேவா சங்க செயலாளர் தாமோதரன், கணேசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கவுரவித்தனர். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.