அ.தி.மு.க.வினர் புறக்கணிப்பு. 
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.வினர் புறக்கணிப்பு

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் புறக்கணிக்கப்பட்டனர்.

மாலை மலர்

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் வணிக வளாகங்கள் ஒப்பந்தம் புதுப்பிப்பது மற்றும் வாடகை பாக்கி வசூலிப்பது தொடர்பான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.  ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், பி.ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலகத்திற்கு உட்பட்ட 19 டைகள் ஏலம் விடுவது குறித்து விவாதிக் கப்பட்டது.   இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நிலையூர் முருகன், தவமணிமாயி, சாந்தி கோபாலச்சாரி பார்த்திபராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆணையாளரை சந்தித்து தாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி சென்றனர். 

 இதுகுறித்து ஒன்றியகுழு உறுப்பினர் நிலையூர் முருகன் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு மக்களுக்கான அடிப்படை வசதிகள் அதிகஅளவில் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த 10 மாதகால தி.மு.க. ஆட்சியில் எந்தவித திட்டப்பணிகளும் நடைபெறவில்லை உறுப் பினர்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதில் தாமதம் ஏற்படுகிறது.  வணிக வளாகங்களுக்கு முதலில் வாடகை பாக்கியை வசூல் செய்துவிட்டு அடுத்ததாக ஏலம் விடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிறப்பு கூட்டம் நடத்த எங்களுக்கு உடன்பாடு ஏற்படாததால் இதனை புறக்கணிக்கிறோம் என்றார். 

ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன் கூறுகையில், கடந்த 10 மாதகால தி.மு.க. ஆட்சியில் மக்கள் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது அதிகாரிகள் அனைவரும் காலை 8 ணிக்கு அந்தந்த ஊராட்சிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 19 வணிக வளாகங்களில் 4பேர் தவிர மற்ற 15கடைகள் வாடகை கட்டடத்தில் அங்கு வாடகை பாக்கி வசூல் செய்து மற்றும் மறு ஏலம் விடுவது தொடர்பான இன்று கூட்டம் நடைபெற்றது என்றார்.