உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி

ஏ.டி.எம். கார்டை வாங்கி பெண்ணிடம் ரூ.30ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பணம் எடுத்து தருவதாக கூறினார்.

MDUKalaivani

மேலூர்

மேலூர் காந்திநகரை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மனைவி வைகை ஜோதி (வயது42). பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

அவர் அடிக்கடி மனைவிக்கு பணம் அனுப்புவது வழக்கம். அதேபோல் கணவர் பணம் அனுப்பியதால் அதை எடுப்பதற்காக வைகை ஜோதி மேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். சென்டர் சென்றார். அப்போது அங்கு பணம் எடுக்க பலர் நின்றிருந்தனர். இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் வைகை ஜோதியிடம் பணம் எடுத்து தருவதாக கூறினார்.

அதை நம்பி வைகை ஜோதி அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பின் நம்பரையும் தெரிவித்து ள்ளார். அந்த வாலிபர் பணம் வரவில்லை என்று வேறு கார்டை அவரிடம் மாற்றி கொடுத்து விட்டு வைகை ஜோதியின் ஏ.டி.எம் .கார்டில் இருந்து ரூ.30,ஆயிரம் எடுத்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகை ஜோதி மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.