உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர்

கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்தனர். எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை செல்லூர்அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 55).இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்லபாண்டியிடம் இருந்து ரூ. 1300- ஐ பறித்து சென்றார்.

இந்த சம்பவம் குறித்து செல்லப்பாண்டி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜெயம் மகன் கழுவ நாதன் என்ற ரஞ்சித் குமாரை (27) கைது செய்தனர்.

சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ரகுநாத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பட்டி பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த சதீஷ்குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.