உள்ளூர் செய்திகள்

நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

நடந்து சென்ற‌ பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

திருமங்கலம்

விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே கோட்டனம் பட்டியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் தனது வீட்டுக்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் சீதாலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து சீதா லட்சுமி மகன் ராம்ராஜ் சாப்டூர் போலீசில் புகார் செய்தார் .

அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.