மதுரை
மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், அரிசி வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). இவர் இரவு திண்டுக்கல் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது.
அதில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது தொடர்பாக விஜயலட்சுமி, கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.