உள்ளூர் செய்திகள்

பெட்டிக்கடையில் திருடிய 3 பேர் கைது

பெட்டிக்கடையில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம் 

மதுரை மாவட்டம் சிந்துபட்டியை அடுத்துள்ள கட்டத்தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 46). இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பெட்டிக்கடையை உடைத்த மர்ம நபர்கள் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெட்டிக்கடையில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த அஜீத் (25), விக்னேஷ் (23),தினேஷ் (21) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT