கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர்கள்.  
உள்ளூர் செய்திகள்

கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

மதுரை ரெயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் ெரயிலில் வந்தவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

மதுரை

மதுரை எக்ஸ்பிரஸ் ெரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, ெரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ெரயில் நேற்று இரவு 12 மணி அளவில் மதுரைக்கு வந்து சேர்ந்தது. அப்போது போலீசார் ெரயிலில் வந்தவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது தோல் பைகளுடன் வந்த 2 பேரை மறித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்எதேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் 62 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தியது மதுரை செல்லூர் ஜீவா தெரு, ஜெயபாண்டி ‌(31), ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பெருக்கீடு, குடிவாடா ரோடு, ஹனுமான் சந்திப்பு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் வாழி (22) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.