உள்ளூர் செய்திகள்

2 வாலிபர்கள் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை

அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி கணேசநகர் முதல்தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் கணேசமூர்த்தி(23). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களாக மன விரக்தியில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் தட்சிணாமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.பி.குளம் மருதுபாண்டியர் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (32). நிரந்தர வேலை இல்லாமல் கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். இதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காளிமுத்துவின் தாய் பாண்டிச்செல்வி தல்லாகுளம் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

SCROLL FOR NEXT