மதுரை
மதுரை மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் சுரேஷ். வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவரது மகன் ஏழுமலை (வயது 12). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சுரேஷ் வீட்டின் அருகே வசிக்கும் அபிஷேக் என்பவரது குடும்பத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அந்த வீட்டின் முன்பாக சாமியானா பந்தல் போடப்பட்டு, அதில் டியூப் லைட் மற்றும் சீரியல் விளக்குகள் கட்டப்பட்டு இருந்தன.
ஏழுமலை நேற்று வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டு இருந் தான். அப்போது அவன் எதிர்பாராத விதமாக சாமியானா பந்தல் கம்பியை தொட்டான். அப்போது மின்சாரம் தாக்கி யதில் ஏழுமலை தூக்கி வீசப் பட்டான்.
உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏழுமலை ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாப மாக இறந்தான்.
இது தொடர்பாக அவரது தந்தை சுரேஷ் கீரைத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சாமியானா பந்தல் போடும்போது அலட்சியமாக செயல்பட்டதாக அபிஷேக், முருகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து, விசா ரணை நடத்தி வருகின்றனர்.