மதுரை
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27ந்தேதி தொடங்கியது. இந்த ஆண்டு சிறப்பு பிரிவை தவிர பொது கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைன் வழியாக நடத் தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 17 சுயநிதி கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரி கள், 19 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6,639 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு நடந்த முதல்கட்ட கலந்தாய்வில் 6,043 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைன் வழியாக வழங்கப்பட்டது.
எஸ்.சி., எஸ்.டி. ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்கும் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்றது. 596 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளில் சேர்வதற்கு ஒதுக்கீடு கடிதம் பெற்ற மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்தி வந்தனர்.
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு கல்வி கட்டணத்தை செலுத்தி சேர்ந்தனர். அவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியது.
கொரோனா தொற்று பரவல் காலத்தில் மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலதாமதமாக வகுப்புகள் தொடங்கி உள்ளது. 6,043 மருத்துவ மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வந்தனர். புதிய மாணவர்களை வர வேற்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளை ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளும் செய்திருந்தன.
மூத்த மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை மலர்கள் கொடுத்து வரவேற்றனர். புதிதாக கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் ஒருவித பதட்டத்தில் இருந்தாலும் கூட அவர்களை கல்லூரி முதல்வர்கள் அன்போடு வரவேற்று இருக்கைகளில் அமர வைத்தனர்.
மதுரை அரசு கல்லூ ரியில் இன்று காலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்து இருந்தனர். அவர்களை 2, 3-ம் ஆண்டு மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து முதலாமாண்டு மாணவ, மாணவிகள் வகுப்பறை களில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.
இதுதொடர்பாக மதுரை அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமியிடம் பேசியபோது, “மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 67 பேருக்கு அட்மிஷன் தரப்பட்டு உள்ளது. அவர்கள் இன்று காலை கல்லூரிக்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு வகுப்பறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் நேரடி வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. மாணவ-மாண விகள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.