மதுரை
மதுரை பரவை பாங்க் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(வயது 40). இவர் சேலம் மத்திய ஜெயிலில் போலீஸ் ஏட்டுவாக உள்ளார்.
பாண்டியராஜனும் அதே பகுதியை சேர்ந்த பொன்னழகு என்பவரும் இணைந்து அந்தப்பகுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாண்டியராஜன் சம்பவத்தன்று வெளியே சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த பொன்னழகு ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.
இதனை பாண்டியராஜன் தட்டிக்கேட்க பொன்னழகு வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக் கும், பொன்னழகு குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பொன்னழகு குடும்பத்தினர் பாண்டியராஜனை உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக பாண்டியராஜன் சமயநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னழகு, அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் சோபனா ஆகிய 3பேரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.